பாலியல் புகார்! - மன்னிப்பு கேட்கும் பாடகர் கார்த்திக்

பிரபல பின்னணி பாடகி சின்மயி, கடந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து மீது மீ டூ புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், தொடர்ந்து பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறிய அவர், சினிமா பிரபலங்கள் மீது பல பெண்கள் தெரிவித்த பாலியல் புகார்களையும், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த வரிசையில், பிரபல பாடகரான கார்த்திக், பல பெண்களிடம் தவறான மெசேஜ் அனுப்புவது, தவறாக தொடுவது என மோசமாக நடந்துகொள்வார் என வெளிநாட்டு தமிழ் பாடகி ஒருவர் புகார் கூறினார். அவரது இந்த புகாரை சின்மயி, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
ஆனால், இது தொடர்பாக அப்போது பாடகர் கார்த்திக் எந்தவித விளக்கமோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்காத நிலையில், தற்போது இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”எனக்கு தெரிந்து நான் யாரையும் அப்படி செய்யவில்லை. அப்படி இருந்தால் வாருங்கள், மன்னிப்பு கேட்கிறேன் - சட்ட ரீதியாக நடவடிக்கையை எதிர்கொள்ளவும் தயார்” என்று தெரிவித்துள்ளார்.
— Karthik Music Exp (@singer_karthik) February 18, 2019