Aug 04, 2018 09:44 AM

தூங்கா நகர மக்களை வியப்பில் ஆழ்த்திய சிவகார்த்திகேயன்

தூங்கா நகர மக்களை வியப்பில் ஆழ்த்திய சிவகார்த்திகேயன்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ என இரண்டு மெகா ஹிட்டுகளை கொடுத்த சிவகார்த்திகேயன் - இயக்குநர் பொன்ராம் கூட்டணி, மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘சீமராஜா’. இதில் சமந்தா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சிம்ரன், சூரி என்று பெரிய நட்சத்திரம் பட்டாளே நடித்திருக்கிறார்கள்.

 

டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடைபெற்றது.

 

Seemaraja Audio Launch

 

இந்த இசை வெளியீட்டு விழாவை பெருவிழாவாக்க முடிவு செய்த 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தது.

 

Seemaraja Audio Launch

 

ஒயிலாட்டாம், குதிரையாட்டம், கிரகாட்டம் என்று கிராமத்திய கலைகள், வண்ண வண்ண தோரணங்கள், கடை வீதிகள், ஜொலிக்கும் மின் விளக்குகள், ராட்சத ராட்டினம் என்று நேற்று மதுரையே விழாக்கோலமாக இருந்தது.

 

Seemaraja Audio Launch

 

சித்திரை திருவிழாவுக்கு எப்படி மதுரை ஜொலிக்குமோ அதுபோன்ற ஒரு ஜொலி ஜொலிப்பை நிகழ்த்துக் காட்டிய சீமராஜா இசை வெளியீட்டு விழாவின் ஏற்பாடுகளைப் பார்த்த மதுரை மக்கள் வியந்துபோய்விட்டனர். அதுமட்டும் இன்றி, மதுரை முழுவதும் சிவகார்த்திகேயன் பேனர்கள் பட்டையை கிளப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

Seemaraja Audio Launch