சிவகார்த்திகேயனின் 16 வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகிக் கொண்டே போகிறார். ஏற்கனவே மூன்று படங்களை கமிட் செய்திருப்பவர், தற்போது தனது 16 வது படமாக, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘எஸ்.கே 16’ என்று அழைக்கின்றனர். இதில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஹீரோயினாக நடிக்கிறார்கள்.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். வீரசமர் கலையை நிர்மாணிக்க, படத்தொகுப்பை ஆண்டனி எல்.ரூபன் கவனிக்கிறார்.
மேலும், பிரபல இயக்குநர்களான பாரதிராஜா மற்றும் சமுத்திரகனி இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நட்டி நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு, வேல ராமமூர்த்தி, நாடோடிகள் கோபால், சுப்பு பஞ்சு, அர்ச்சனா, ரமா என பெரிய நட்சத்திர பட்டாளாமே நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் எளிமையாக தொடங்கியது.