Jun 30, 2019 09:37 AM

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் மூன்றாவது படத்தின் தலைப்பு ‘வாழ்’!

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் மூன்றாவது படத்தின் தலைப்பு ‘வாழ்’!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்த ‘கனா’ மற்றும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ ஆகிய படங்களை தொடர்ந்து தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு ‘வாழ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ‘அருவி’ பட புகழ் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார்.

 

தற்போது விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

ஷெல்லி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்க, இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன், குட்டி ரேவதி, இசையமைப்பாளர் பிரதீப் குமார் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு செய்ய, ஸ்ரீராமன் கலையை நிர்மாணிக்கிறார். திலீப் சுப்பராயண் சண்டைப்பயிற்சியை கவனிக்க, ஜெய்கர் பி.எச் ஒலிவடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

 

Vaazhl Movie Posters

 

இப்படத்தை சிவகார்த்திகேயன் நிறுவனத்துடன் மதுரம் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. கலை அரசு இணை தயாரிப்பாளராகவும், ரா சிபி மாரப்பன் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

 

இப்படத்தின் நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.