’தந்த்ரா’ பட விழாவில் தயாரிப்பாளர்களுக்கு அறிவுரை சொன்ன சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்க தலைவர்!

எஸ் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் சார்பில் சுஷ்மா சந்திரா தயாரிப்பில், வேதமணி எழுத்து, இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘தந்த்ரா’. இதில் அன்பு மயில்சாமி நாயகனாக நடிக்க, நாயகியாக பிருந்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் சாம்ஸ், சுவாமிநாதன், நிழல்கள் ரவி, மனோபாலா, சித்தா தர்ஷன், சசி, களவாணி தேவி, மாதேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கிறார்கள்.
கணேஷ் சந்திரசேகரன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஹாபிஸ் எம்.இஸ்மாயில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முகேஷ் ஜி.முரளி மற்றும் எலிசா படத்தொகுப்பு செய்ய, மணிமொழியன் ராமதுரை கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சஞ்சனா நஜம் நடனக் காட்சிகளை வடிவமைக்க, மோகன் ராஜன், சத்யசீலன் பாடல்கள் எழுதியுள்ளனர். மக்கள் தொடர்பாளராக பி.மணிகண்டன் (கே.எம் மீடியா) பணியாற்றுகிறார்.
அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன், படத்தை வெளியிடும் ஜெனிஷ் மற்றும் சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.அன்புசெல்வன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
படம் குறித்து இயக்குநர் வேதமணி கூறுகையில், “இந்த உலகம் முழுவதும் முழுமையாக நல்லதாக மாற வாய்ப்பிலை. அதே நேரத்தில் கெட்டது முழுமையாக ஆட்சி செய்யவும் வாய்ப்பில்லை. நல்லதும்,கெட்டதும் நிறைந்தது தான் உலகம் என்பது தான் ’தந்த்ரா’ படத்தின் கதை.” என்றார்.
விநியோகஸ்தர் ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனீஷ் பேசுகையில், “சிறு முதலீட்டு திரைப்படங்களை எங்கள் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தரமான திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.” என்றார்.
சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆர்.கே.அன்புசெல்வன் பேசுகையில், ”தயாரிப்பாளர்கள் படத்தை மட்டும் ஒழுங்காக எடுக்க வேண்டும்.அவர்களே நடிப்பு,இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்து வேலையும் பார்க்க கூடாது” என்றார்.
நடிகர் அன்பு மயில்சாமி பேசுகையில் “அப்பா என்னை மேலிருந்து ஆசிர்வாதம் செய்கிறார்” என்றார்.
நடிகர் சுவாமிநாதன் பேசுகையில் “சாம்ஸ் உடன் நடிப்பது பெரிய சவாலாக இருந்தது” என்றார்.
விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘தந்த்ரா’ திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.