May 31, 2020 11:00 AM

அதிர்ச்சி செய்தி - கொரோனாவால் குஷ்பூ குடும்பத்தில் நிகழ்ந்த மரணம்!

அதிர்ச்சி செய்தி - கொரோனாவால் குஷ்பூ குடும்பத்தில் நிகழ்ந்த மரணம்!

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது. அதே சமயம், கொரோனாவால் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

 

இந்த நிலையில், பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பூவின் குடும்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மும்பையில் உள்ள குஷ்பூவின் நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று இரவு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துவிட்டார்.

 

இந்த தகவலை நடிகை குஷ்பூ, தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இதை அறிந்த சினிமா பிரபலங்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.