Jul 31, 2019 03:10 AM

இயக்குநர் மகேந்திரனின் நினைவைப் பற்றி பேசும் ‘சொல்லித் தந்த வானம்’!

இயக்குநர் மகேந்திரனின் நினைவைப் பற்றி பேசும் ‘சொல்லித் தந்த வானம்’!

மறைந்த இயக்குநர் மகேந்திரனின் நினைவைப் பற்றி பேசும் ‘சொல்லித் தந்த வானம்’ நூலை கே.பாக்யராஜ் வெளியிட்டார்.

 

மறைந்த யதார்த்த இயக்குநர் மகேந்திரன் அவர்களின் நினைவைப் பற்றிப் பேசுகிற நூல் ’சொல்லித் தந்த வானம்’. இந்த நூலை மூத்த பத்திரிகை நிருபரும், எழுத்தாளருமான அருள்செல்வன் பலரது அனுபவங்களைத் தொகுத்து எழுதி இருக்கிறார். இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு தென் இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க அலுவலகத்தில் சமீபத்தில் எளிமையாக நடைபெற்றது.

 

Solli Thantha Vaanam Book Launch

 

இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே.பாக்யராஜ் பங்கேற்று நூலை வெளியிட, இயக்குநர் யார் கண்ணன் பெற்றுக் கொண்டார்.

 

நிகழ்வில் இயக்குநர்கள் மனோஜ்குமார், மனோபாலா, ரமேஷ் கண்ணா, ஏ.வெங்கடேஷ், சண்முகசுந்தரம், லியாகத் அலிகான், சி.ரங்கநாதன், யுரேகா, கவிஞர் விவேகா, பின்னணிக் குரல் கலைஞர் ஹேமாமாலினி, மக்கள் தொடர்பாளர்கள் சக்தி சரவணன், ராஜ்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

Solli Thantha Vaanam Book Launch