Feb 06, 2020 03:42 AM

யாரோ பெத்த புள்ளைக்கு அப்பானு சொல்றான்! - பிரபலத்தை கிழித்த வனிதா

யாரோ பெத்த புள்ளைக்கு அப்பானு சொல்றான்! - பிரபலத்தை கிழித்த வனிதா

பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்தாலும், அதில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள், அவ்வபோது எதாவது சர்ச்சையில் சிக்கி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், பிக் பாஸ் தர்ஷனால் ஏற்பட்ட காதல் சர்ச்சை தற்போது போலீஸ் புகார் வரை சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிக் பாஸ் தர்ஷனுக்கு பல வகையில் உதவி செய்திருக்கும் நடிகை சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிந்துவிட்டார், என்று போலீசில் புகார் அளிக்க, அதற்கு மறுப்பு தெரிவித்த தர்ஷன், திருமண நிச்சயதார்த்தத்திற்கு பிறகு சனம் ஷெட்டி, அவரது முன்னாள் காதலருடன் இரவு பார்ட்டி பண்ணிணார், இதுபோல் அவர் பல தவறுகளை செய்துள்ளார், அதற்காக ஆதாரங்கள் தன்னிடம் இருக்கிறது, என்று விளக்கம் அளித்தார்.

 

Darshan and Sanam Shetty

 

இவர்கள், ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வரும் நிலையில் இவர்களது தோழர்கள் சிலர் தர்ஷனுக்கு ஆதரவாகவும், சிலர் சனம் ஷெட்டிக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 3 யின் அதிரடி போட்டியாளரான வனிதா, தர்ஷன் - சனம் ஷெட்டி பிரச்சினை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், தர்ஷன் மீது தான் தவறு, சனம் ஷெட்டியை அவன் ஏமாற்றிவிட்டார், என்று வெளிப்படையாக கூறியதோடு, தர்ஷன் சனம் ஷெட்டி பற்றி கூறிய குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பும் தெரிவித்தார்.

 

சனம் ஷெட்டி, வேறு ஒரு ஆணுடன் இரவு பார்ட்டி பண்ணினார், என்று தர்ஷன் எப்படி கூறலாம். இந்த ஆண்களே இப்படி தான், தங்கள் மீதுள்ள தவறை மறைக்க பெண்கள் மீது பழி சுமத்துவதோடு, அதனால் அவர்களே சிக்கிக்கொள்வார்கள், என்று கூறிய வனிதா, தன் வாழ்விலும் இப்படி ஒரு களங்கத்தை நடன இயக்குநர் ராபர்ட் சுமத்தினார்.

 

என்னுடன் பழகவில்லை என்று ராபர்ட் பொய் கூறினார். ஆனால், அதனால் என்ன ஆனது, அவர் என் பெயரை டாட்டூ குத்தியது உள்ளிட்ட அனைத்து உண்மைகளும் தெரிய வந்தது. என்னை பற்றி கேட்டால், தனக்கு எதுவும் தெரியாது, அதைப் பற்றி பேச விருப்பம் இல்லை, என்று சொல்லிவிட்டு போகாமல், எனக்கு ஒரு பெண் இருக்கிறது, நான் எப்படி அவருடன் பழகுவேன், என்று அப்பாவி போல பேட்டி கொடுத்தார்.

 

Vanitha and Robert

 

யாரோ பெத்த பிள்ளையை அவன் தன் பிள்ளை என்று கூறுகிறான், அது தனி கதை, விடுங்க. எதுக்கு இப்படி தேவையில்லாமல் பேசனும். இப்போ தர்ஷனும் அப்படி தான் தேவையில்லாமல் சனம் ஷெட்டி பற்றி பேசி வருகிறார். இதனால், அவரே சனம் ஷெட்டியுடன் எப்படி பழகினார், என்பதை சொல்கிறார், என்றார்.