Feb 15, 2019 05:37 AM

சோனாவை கவலைப்பட வைத்த காதலர் தினம்! - காரணம் இது தான்

சோனாவை கவலைப்பட வைத்த காதலர் தினம்! - காரணம் இது தான்

தமிழ் சினிமாவில் முக்கிய கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சோனா, திடீரென சொந்தமாக திரைப்படம் தயாரித்தார். ஆனால், அதில் பெருத்த நஷ்ட்டம் அடைந்ததோடு, தன்னை பலர் ஏமாற்றிவிட்டதாகவும் புகார் கூறினார். 

 

மேலும், தனக்கு பின்னணி பாடகர் எஸ்.பி.பி.சரண், பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஊடகங்களிடம் பகீரங்கமாக புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், பிறகு தனது வாழ்க்கையை புத்தமாக எழுத இருப்பதாகவும், அதில் பல முக்கிய புள்ளிகளின் ரகசியங்களை வெளியிடப் போவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சோனா அப்படி அறிவித்த சில நாட்களில், தனக்கு மிரட்டல் வருகிறது என்றும் கூறியவர், தனது வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க இருப்பதாகவும் கூறினார்.

 

இப்படி பல வகையில் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய சோனா, தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வந்தார். பிறகு சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் சோனா, காணாமல் போக, தற்போது மீண்டும் சில படங்களில் சிறு வேடங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

 

இந்த நிலையில், காதலர் தினம் குறித்து ஊடகம் ஒன்றில் சமீபத்தில் பேசிய நடிகை சோனா, தனக்கும் காதலுக்கும் ராசியே இல்லை. நான் இரண்டு பேரை காதலித்திருக்கிறேன், ஆனால் அந்த இரண்டு காதலும் தோல்வியில் தான் முடிந்தது, என்று கவலையோடு கூறினார்.