Mar 09, 2019 07:57 AM

திருமணத்திற்கு பிறகு செளந்தர்யா வெளியிட்ட வீடியோ!

திருமணத்திற்கு பிறகு செளந்தர்யா வெளியிட்ட வீடியோ!

ரஜினிகாந்தின் இளைமகள் செளந்தர்யா முதல் கணவரை விவாகரத்து செய்ததை தொடர்ந்து தொழிலதிபர் விசாகனை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் கடந்த மாதம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு ஹனிமூனுக்கு சென்ற செளந்தர்யா, தனது மகன் வேத்தை மிஸ் பண்ணுவதாக, சமூல வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், தனது ஹனிமூன் புகைப்படங்களையும் வெளியிட்டார்.

 

இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக தனது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத்துடன் காரில் பயணிக்கும் வீடியோ ஒன்றை செளந்தர்யா வெளியிட்டுள்ளார்.

 

விளையாட்டு பொருளை வைத்துக் கொண்டு வேத் விளையாடும் இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.