May 09, 2019 04:26 AM

சமாதானம் ஆன எஸ்.பி.பாலசுப்ரமணியம்! - மீண்டும் இளையராஜவுடன் இணைகிறார்

சமாதானம் ஆன எஸ்.பி.பாலசுப்ரமணியம்! - மீண்டும் இளையராஜவுடன் இணைகிறார்

இளையராஜாவின் இசையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலில் பல நூற்றுக்கணான பாடல்கள் மெஹா ஹிட் பாடல்களாக அமைந்ததோடு, பல இசை நிகழ்ச்சிகளிலும் இவரகளது பாடல்கள் ரசிகர்களின் விருப்பமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

 

ஆனால், காப்புரிமை விவகாரத்தில் இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும், மேடை நிகழ்ச்சிகளில் ஒன்றாக சேர்ந்து பாடுவதில்லை. இந்த காரணத்திற்காக தான், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுகாக நடத்திய பிரம்மாண்ட நிகழ்ச்சியிலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கலந்துக் கொள்ளவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

 

இந்த நிலையில், இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2 ஆம் தேதி சென்னையில் நடக்கும் இசை நிகழ்ச்சியில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் கலந்துக் கொண்டு பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஒத்திகை வரும் மே 22 ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், கே.ஜே.யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உள்ளிட்ட பல பிரபலமான பாடகர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்க இருக்கிறார்கள்.

 

பாடல்களின் ராயல்டிக்காக தனது பாடலை மேடை நிகழ்ச்சிகளில் பாட கூடாது என்று அறிவித்த இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடத்திய ஒரு இசை நிகழ்ச்சியில் தனது பாடல் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவருக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பினார். இதையடுத்து எஸ்.பி.பாலசுப்ரமணியமும், இளையராஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

 

இளையராஜாவின் பிறந்தநாளுக்காக நடத்தப்படும் இந்த இசை நிகழ்ச்சியில் பல முக்கிய பாடகர்கள் பங்கேற்ப எஸ்.பி.பி-யும் பங்கேற்றால் சிறப்பாக இருக்கும் என்று கருதிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இது குறித்து எஸ்.பி.பி-யிடம் பேச, அவரும் சமாதானம் ஆகி, இளையராஜாவுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதித்து விட்டாராம்.

 

அதே சமயம், எஸ்.பி.பி மற்றும் இளையராஜா ஒன்றாக பங்கேற்பது உறுதியாகவில்லை என்று அவர்களது தரப்பு தெரிவிக்கின்றன.