Jun 08, 2020 04:03 PM

கிரேஸி மோகனுக்கான சிறப்பு நினைவேந்தல்! - கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெறுகிறது

கிரேஸி மோகனுக்கான சிறப்பு நினைவேந்தல்! - கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெறுகிறது

மேடை நாடகம் மற்றும் சினிமா இரண்டிலும் தனது நகைச்சுவை எழுத்துக்களாலும், நடிப்பாலும் தனக்கென்று தனி பாதையை வகுத்துக் கொண்டதோடு, மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் கிரேஸி மோகன். பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும், தனது நகைச்சுவை படைப்புகளின் மூலம் நாடக உலகிலும், திரையுலகிலும் தவிர்க்க முடியாதவராக இருக்கும் கிரேஸி மோகன், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி மரணம் அடைந்தார்.

 

தான் இறந்தாலும், தனது படைப்புகள் மூலம் இன்னமும் மக்களை சிரிக்கவும், மகிழவும் செய்துக் கொண்டிருக்கும் கிரேஸி மோகனுக்கு சிறப்பு நினைவேந்தல் நிகழ்வை நடத்த டோக்கியோ தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

 

கொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டில் முடங்கியிருக்கும் தற்போதைய சூழலில், நேரலை நிகழ்வாக நடைபெறும் இந்த நிகழ்வை டோக்கியோ தமிழ்ச் சங்கத்துடன் கிரேஸி கிரியேஷன் இணைந்து வரும் ஜூன் 10 ஆம் தேதி, நடிகர் கமல்ஹாசன் முன்னியில் வழங்குகிறது.

 

எளிய மற்றும் புதிதமான மனிதரின் ஓராண்டு நினைவு நாளை சிறப்பிக்க உலகெங்கிலும் உள்ள 25-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் மற்றும் சங்கங்கள் தமது கரங்களை இணைத்திருக்கின்றன. பல்வேறு சமூக வலைத்தளங்களில் நேரலையில் ஒளிபரப்படும் இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபு, நாசர், சந்தானபாரதி, நடிகை குஷ்பூ, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், முனைவர் கு.ஞானசம்பந்தன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொள்கிறார்கள்.

 

இந்த நினைவேந்தல் நிகழ்வு வடிவம் பெற்று அரங்கேற கிரேஸி கிரியேஷனின் மாது பாலாஜி, அதன் அங்கத்தினர், நடிகர் நாசர் மற்றும் டோக்கியோ தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஜி.ஹரிநாராயணன் மற்றும் அங்கத்தினர் அனைவரின் முன்னெடுப்பும், முனைப்பும் காரணம்.

 

இந்த நேரலை நிகழ்வில், துபாய் பொன்மாலைப் பொழுது நண்பர்கள் குழுமத்தின் படைப்பாக்கத்தில், டோக்கியோ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் ”கிரேஸி மோகன் சிறப்பு நினைவுப் பாடல்” ஒன்று கமல்ஹாசனால் வெளியிடப்பட உள்ளது.

 

மேலும், கிரியேஸி கிரியேஷனின் கடந்த கால பணிகளை சிறப்பு செய்து, கிரேஸி மோகனின் வழித்தடத்தில் தொடரும் நாடகப் பணியை வாழ்த்து கூறி பாராட்டி, டோக்கியோ தமிழ்ச் சங்கம் சிறப்பு செய்ய இருக்கிறது.