Mar 01, 2019 09:54 AM

விஜய், அஜித் படங்களுக்கு இனி அதிகாலை காட்சிகள் இல்லை! - ஏன் தெரியுமா?

விஜய், அஜித் படங்களுக்கு இனி அதிகாலை காட்சிகள் இல்லை! - ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோரது படங்கள் என்றாலே அவர்களது ரசிகர்களுக்கு மட்டும் திருவிழா அல்ல, திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று திரைத்துறையை சார்ந்தவர்களுக்கும் திருவிழா தான். அந்த அளவுக்கு அவர்களது படங்கள் கல்லா கட்டும்.

 

எனவே, விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் ஆதரவை பெற சென்னையில் உள்ள பல திரையரங்குகள் நள்ளிரவும் அற்றும் அதிகாலை காட்சிக்கு ஏற்பாடு செய்வதோடு, 25வது விழா, 50 வது விழாக்களையும் கொண்டாடுகிறார்கள். அதேபோல், அவர்களது பிறந்தநாளில் அவர்களது சூப்பர் டூப்பய் ஹிட் படங்களை போட்டு ரசிகர்களை கெளவர்கிறார்கள்.

 

இப்படி பல திரையரங்கங்கள் செய்து வந்தாலும், சென்னை ரோஹினி திரையரங்கம் இதில் தனி கவனமே காட்டுகிறது. விஜய், அஜித் என்று இரண்டு தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் அந்த திரையரங்கத்தின் நடவடிக்கைகள் இருந்த நிலையில், தற்போது இரு தரப்பு ரசிகர்கள் மீது ரோஹினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் கடும் கோபத்தில் இருக்கிறார்.

 

இதற்கு காரணம், சமீபத்தில் அஜித்தின் ’விஸ்வாசம்’ படத்தின் 5 வது நாள் கொண்டாடப்பட்டது. இது குறித்து ரேவந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் முன் கூட்டியே தகவல் வெளியிட்டதால், ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்துவிட்டார்கள். இது திரையரங்க உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும் நிகழ்ச்சி முடிந்த போது பெரும் வருத்தமடையும் அளவுக்கு ரசிகர்கள் நடந்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, ரோஹினி திரையரங்கத்தின் ஸ்கீரினை ரசிகர்கள் கிழித்துவிட்டார்களாம்.

 

இந்த கிழிந்த ஸ்கீரினை மாற்ற ரூ.6.5 லட்சம் செலவாவதோடு, அந்த ஸ்கிரீன் வெளிநாட்டில் இருந்து வரவைக்க வேண்டியுள்ளதால் சில நாட்கள் காத்திருக்கவும் வேண்டுமாம். 

 

இதற்கு முன், இதே திரையரங்கில் விஜய்யின் ஸ்பெஷல் படம் திரையிட்ட போதும் அவரது ரசிகர்களால் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ரேவந்த், இனி திரையரங்கத்திற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் வரை அதிகாலை காட்சிகளை போடப்போவதில்லை என்று கோபமாக கூறியுள்ளார்.