Feb 20, 2019 05:04 AM

பிரபல இயக்குநர் குறித்து ஸ்ரீரெட்டி வெளியிட்ட போட்டோ ஆதாரம்

பிரபல இயக்குநர் குறித்து ஸ்ரீரெட்டி வெளியிட்ட போட்டோ ஆதாரம்

தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, கடந்த ஆண்டு தெலுங்கு சினிமா நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியதோடு, சில புகைப்படங்களையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் மீதும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார்.

 

மேலும், சென்னையில் முகாமிட்ட ஸ்ரீரெட்டி, பத்திரிகையாளர்கள் முன்பு தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி வந்த நிலையில், ராகவா லாரன்ஸ் அவருக்கு பட வாய்ப்பு அளித்தார். அதை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்ற ஸ்ரீரெட்டி, சென்னையிலேயே செட்டிலாகப் போவதாகவும் அறிவித்தார்.

 

இப்படி பரபரப்பு புகார் கூறிய ஸ்ரீரெட்டி, சில மாதங்களாக எந்தவித புகாரும் கூறாமல் இருந்த நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநர் மீது புகைப்படத்துடன் பாலியல் புகார் கூறியுள்ளார்.

 

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் கொரடாலா சிவாவை, “இவர் காமசூத்ராவின் பாஸ்”, ”இவர் நம்பர் 1, மோசமானவர்” என்று விமர்சித்திருப்பதோடு, பெயர் குறிப்பிடாமல் இருவர் ஒன்றாக இருக்கும் ஒரு ஆபாச படத்தையும் வெளியிட்டுள்ளார்.

 

Sri Reddy

 

Sri Reddy