Sep 26, 2019 07:01 AM

திரிஷா பற்றி பகீர் தகவல் வெளியிட்ட ஸ்ரீரெட்டி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்

திரிஷா பற்றி பகீர் தகவல் வெளியிட்ட ஸ்ரீரெட்டி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியதால் ஆந்திராவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர் ஸ்ரீரெட்டி. அங்கிருந்து கிளம்பியவர் நேராக, “வந்தாரை வாழ வைக்கும்” சென்னையில் முகாமிட்டிருப்பதோடு, தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் மீது பாலியல் புகார் கூறி அதிர வைத்தார்.

 

இவரது புகாருக்கு பயந்துபோன சில தமிழ் சினிமா பிரபலங்கள் இவரை அழைத்து கவனித்ததாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ, ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் சகல வசதிகளுடன் வாழ தொடங்கிவிட்டாராம். சில படங்களில் நடிப்பதாக அவர் கூறினாலும், அவரது நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. இருந்தாலும், ஸ்ரீரெட்டியை தெரியாதவர்கள் தமிழகத்தில் இல்லை, என்ற நிலையை உருவாக்கிவிட்டார்.

 

இதற்கு காரணம், அவர் அவ்வபோது சினிமா பிரபலங்கள் பற்றி வெளியிடும் பகீர் தகவல்கள் தான். அந்த அகையில், திரிஷா பற்றி அவர் வெளியிட்டிருக்கும் ஒரு பகீர் தகவலால் திரிஷா ரசிகர்கள் மட்டும் ஒன்றி ஒட்டு மொத்த தமிழக ரசிகர்களும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

 

அதாவது, பல ஆண்டுகளுக்கு முன்பு திரிஷாவின் குளியல் வீடியோ ஒன்று வெளியானது அல்லவா, அந்த வீடியோ மூலம் தான் திரிஷா பிரபலமானாராம். அதற்கு முன்பு அவர் பெரிய அளவில் பிரபலம் இல்லை, என்று ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார். மேலும், தானும் அதுபோன்ற வீடியோவை ஏன் வெளியிடக்கூடாது. திரிஷாவிடம் எதுவும் இல்லை. ஆனால், தான் வெளியிட்டால் வீடியோ பயங்கர ஹாட்டாக இருக்கும், என்றும் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் சினிமாவில் சுமார் 15 ஆண்டுகளாக முன்னணி ஹீரோயினாக இருக்கும் திரிஷா, தற்போதும் பெர்ரிய ஹிட் படங்களை கொடுத்து வரும் நிலையில், ஸ்ரீரெட்டியின் இந்த மட்டமான பதிவால், ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களும் அவர் மீது கடுப்பாகி இருக்கிறார்கள்.

 

அதே சமயம், ஸ்ரீரெட்டி இப்படி பல முறை முன்னணி ஹீரோயின்கள் பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஆனால், அதை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. காரணம், ஸ்ரீரெட்டி அந்த அளவுக்கு ஒரு ஆளே, இல்லை என்பது தான். தற்போது திரிஷா விஷயத்திலும் அதே தான் நடக்கப் போகிறது, என்று சிலர் கூறி வருகிறார்கள்.

 

மற்றவர்களை வம்புக்கு இழுத்தே வளர வேண்டும், என்று ஸ்ரீரெட்டி நினைத்துவிட்டார்.