Apr 26, 2021 11:14 AM

இந்திய திரையுலக வரலாற்றில் முத்திரை பதிக்கப் போகும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்

இந்திய திரையுலக வரலாற்றில் முத்திரை பதிக்கப் போகும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்

முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், இந்திய திரையுலகில் முத்திரை பதிக்கும் வகையில், முதன் முறையாக அனிமேட்ரானிக்ஸ் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப முறையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட ராட்சச குரங்கை மையப்படுத்திய திரைப்படம் ஒன்றை தயாரிக்கிறது.

 

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.இராமசாமி தயாரிக்கும் இப்படத்திற்கு ‘கபி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கவுசிக்கரா, என்.இராமசாமி ஆகியோர் இணைந்து இப்படத்தின் கதை எழுத, கோகுல்ராஜ் பாஸ்கர் திரைக்கதை எழுதி இயக்குகிறார். அரவிந்த்சிங் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் நூற்றுக்கும் அதிகமான கணிணி வல்லுனர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, திரையுலகில் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

விலங்குகளை நடிக்க வைத்து பெரும் வெற்றிக்கண்டவர் மறைந்த இயக்குநர் இராம.நாராயணன், அவருடைய நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்திய திரையுலகில் முத்திரை பதிக்கும் வகையில், தயாரித்துள்ள இந்த பிரம்மாண்டமான ராட்சச குரங்குப் படமான ‘கபி’ படத்தின் தயாரிப்பில் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.