விஜய்க்கு ஜோடியான ஸ்ரீதேவி மகள்!

இந்தி படங்களில் நடித்து வரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை தமிழ் மற்றும் தெலுங்க் சினிமாவில் நடிக்க வைக்க சில இயக்குநர்கள் முயற்சித்து வருகிறார்கள். ஜான்வியின் அம்மா ஸ்ரீதேவியும் தனது மகளை தமிழ்ப் படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பாட்டாராம்.
ஆனால், ஜான்வி தொடர்ந்து இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில் சில தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களின் வாய்ப்புகளை நிராகரித்துவிட்டாராம். இதற்கிடையே, அஜித்தின் 60 வது படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஜான்வி நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஜான்வி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமாகியிருக்கும் நிலையில், பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறாராம். இந்த படத்தில் ஜான் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.