Jun 12, 2020 06:06 AM

ஹன்சிகாவுக்கு திடீர் திருமணம்! - மாப்பிள்ளை யார் தெரியுமா?

ஹன்சிகாவுக்கு திடீர் திருமணம்! - மாப்பிள்ளை யார் தெரியுமா?

இந்தி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஹன்சிகா, தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர், தனுஷின் 'மாப்பிள்ளை'’படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர், தற்போது சரியான பட வாய்ப்புகள் இன்றி இருக்கிறார்.

 

தற்போது ‘மகா’ மற்றும் ‘பார்ட்னர்’ என இரண்டு படங்களில் ஹன்சிகா நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் முடியும் தருவாயில் உள்ள நிலையில், கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், நடிகை ஹன்சிகாவுக்கு திடீரென்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பிரபல தொழிலதிபர் தான் மாப்பிள்ளை. இன்னும் 2 நாட்களில் ஹன்சிகாவுக்கும், தொழிலதிபருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. மேலும், இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது.

 

Actress Hansika

 

இதனை அறிந்த நடிகை ஹன்சிகா, ”ரப்பீஸ் யார் அந்த நபர்?” என்று கேள்வி எழுப்பியதோடு. இது முற்றிலும் தவறான செய்தி, என்று அறிவித்துள்ளார்.

 

ஹன்சிக்கா, தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட சில நடிகைகளின் திருமணம் பற்றி அவ்வபோது வதந்திகள் பரவுவதும், அதற்கு அந்த நடிகைகள் விளக்கம் அளிப்பதும் திரையுலகில் வாடிக்கையாகி விட்டது.