Jun 01, 2019 03:57 PM

‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் புதிய திருப்பம்! - கூலான ராகவா லாரன்ஸ்

‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் புதிய திருப்பம்! - கூலான ராகவா லாரன்ஸ்

லாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா 3’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அவர் ’காஞ்சனா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணியில் இறங்கினார். இதில் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்க, ராகவா லாரன்ஸ் இயக்கத்தை மட்டுமே கவனித்து வந்தார்.

 

‘லட்சுமி பாம்’ என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் பஸ்ட் லுக் வெளியான நிலையில், ராகவா லாரன்ஸ் படத்தில் இருந்து திடீரென்று விலகினார். காரணம், தயாரிப்பு தரப்பு அவரை சரியாக மதிக்கவில்லை என்பதோடு, அவரது யோசனையை கேட்காமல் தன்னிச்சையாக சில விஷயங்களை செய்ததாகவும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், மும்பையிலிருந்து சென்னை வந்து ராகவா லாரன்ஸை சந்தித்த தயாரிப்பு நிறுவனத்தினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டது. 

 

Akshay Kumar

 

தன்னைத் தேடி வந்து பேசியதாலும், அக்ஷய் குமார் ரசிகர்கள், என் ரசிகர்கள் என பலரும் கேட்டுக் கொண்டதாலும் மீண்டும் காஞ்சனா ஹிந்தி ரீமேக்கான ’லட்சுமி பாம்’ படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார்.