Jun 25, 2019 06:41 AM

மதம் மாறிய சுதா ரகுநாதன்? - கர்நாடக இசையுலகில் கிளம்பிய எதிர்ப்பு

மதம் மாறிய சுதா ரகுநாதன்? - கர்நாடக இசையுலகில் கிளம்பிய எதிர்ப்பு

சினிமா மற்றும் கர்நாடக இசை என்று இசையுலகத்தில் மிக பிரபலமானவராக இருப்பவர் சுதா ரகுநாதன். இவரது மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. தற்போது இதற்கான அழைப்பிதழ் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

 

சுதா ரகுநாதனின் மகள் வெளிநாட்டை சேர்ந்த கிறிஸ்தவரை திருமணம் செய்யப் போகிறார். இதனால் தான் சுதா ரகுநாதனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 

Sudha Raghunathan Invitation

 

மேலும், கர்நாடக இசைப்பாடகியான சுதா ரகுநாதன் கிறிஸ்தவர் மதத்திற்கு மாறிவிட்டார் என்றும், அவாஇ இனி சபாக்களிலும், கோவில்களிலும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர். இந்த கடந்த 5 நாட்களாக நிலவி வரும் நிலையில், தற்போது விஸ்வரூபம் எடுக்க தொடங்கியிருப்பதோடு, அவரது மகள் திருமணம் செய்ய உள்ள மைக்கேல் என்பவரின் நிறம் குறித்து பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் சுதா ரகுநாதனுக்கு ஆதரவாகவும் பலர் குரல் எழுப்பி வருகிறார்கள்.

 

Sudha Raughunathan Son in Law

 

அதே சமயம், தனது மகள் திருமண விவகாரத்தில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை குறித்து விளக்கமோ அல்லது வருத்தமோ தெரிவிக்காத சுதா ரகுநாதன், எதையும் கண்டுக்கொள்ளாமல் திருமண வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.