Jul 12, 2020 03:44 PM

சன் டிவியின் திடீர் முடிவு! - அதிர்ச்சியில் நடிகர், நடிகைகள்

சன் டிவியின் திடீர் முடிவு! - அதிர்ச்சியில் நடிகர், நடிகைகள்

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி சேனலான சன் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் டி.ஆர்.பி-யில் நம்பர் ஒன் இடத்தை தொட்டு விடும். அதிலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு உண்டு.

 

எந்த தொடராக இருந்தாலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் மக்களிடம் எளிதில் சென்றடைந்துவிடும். அந்த வகையில், சன் டிவி-யில் ஒளிபரப்பான பல சீரியல்கள் மக்களிடம் வரவேற்பு பெற்று வந்தன. ஆனால், கொரோனா பாதிப்பால் சீரியல்கள் ஒளிபரப்பில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.

 

இதற்கிடையே அரசு சீரியல் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கிய நிலையிலும், பழையபடி சீரியல்களின் படப்பிடிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டதால், சன் டிவி-யில் ஒளிபரப்பான சில சீரியல்களின் படப்பிடிப்பு தொடர முடியாமல் இருந்தது.

 

இதற்கிடையே, சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிரபல தொடரான ‘அழகு’ நிறுத்தப்படுவதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், மேலும் 3 சீரியல்களை சன் தொலைக்காட்சி நிறுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

அதன்படி, ‘அழகு’, ‘கல்யாண பரிசு’, ‘சாக்லேட்’ மற்றும் மேலும் ஒரு சீரியல் என மொத்தம் நான்கு சீரியல்களை சன் டிவி டிராப் செய்ய இருக்கிறதாம். இதனால், சீரியல் நடிகர், நடிகைகள் பெரிதும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

 

கொரோனா பாதிப்பால் சீரியல்களின் படப்பிடிப்பை சரியான முறையில் நடத்த முடியாததும், அப்படியே படப்பிடிப்பு தொடங்கினாலும் பழைய நடிகர், நடிகைகளை வைத்து சீரியல் படப்பிடிப்பை நடத்த முடியாததும் இதற்கு காரணம், என்று கூறப்படுகிறது.

 

எது எப்படியோ, சன் தொலைக்காட்சியின் இந்த திடீர் முடிவால் நடிகர், நடிகைகள் மட்டும் இன்றி சீரியல் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.