Jul 26, 2019 09:50 AM

ஹீரோவாகிறார் சூரி! - முன்னணி இயக்குநர் படத்தில் ஒப்பந்தம்

ஹீரோவாகிறார் சூரி! - முன்னணி இயக்குநர் படத்தில் ஒப்பந்தம்

டிவி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சூரி, ‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் பிரபலமான காமெடி நடிகரானவர் படிபடியாக உயர்ந்து முன்னணி காமெடி நடிகரானார்.

 

இதற்கிடையே, அவருக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் பல வந்தாலும், காமெடி மட்டுமே போதும், என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர் தொடர்ந்து காமெடியன் வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால், அவருக்கு அடுத்ததாக வந்த யோகி பாபுவே தற்போது ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளதால் சூரிக்கும் ஹீரோவாக நடித்துவிடலாம், என்ற எண்ணம் வந்துவிட்டது.

 

மேலும், சூரியின் காமெடியும் சமீபகாலமாக ஒர்க் அவுட் ஆகாததால் அவருக்கு பட வாய்ப்புகளும் சரியாக கிடைக்கவில்லை.

 

இந்த நிலையில், வெற்றி மாறன் சூரியை கதையின் நாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்க ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் சூரியுடம் பேச, அவரும் உடனே ஓகே சொல்லிவிட்டார்.

 

தற்போது ‘அசுரன்’ படத்தை முடித்திருக்கும் வெற்றி மாறன், அடுத்ததாக சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஆர்.எஸ் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.