அஜித், விஜய் சாதனையை முறியடித்த சூர்யா!

சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்.ஜி.கே’ வரும் மே 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. சூர்யாவின் முதல் அரசியல் படமாக உருவாகியுள்ள இப்படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சூர்யா ரசிகர்கள் படத்தின் ரிலீஸை மிக பிரம்மாண்டமான முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்-அவுட்டை ‘என்.ஜி.கே’ படத்திற்காக வைத்து சூர்யா ரசிகர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
விஜய்க்கு கேரளாவில் 175 அடி உயர கட்-அவுட் வைத்தது தான் முதல் சாதனையாக இருந்தது. ஆனால், அதை முறியடித்த அஜித் ரசிகர்கள் திண்டுக்கல்லில் 190 அடியில் கட்-அவுட் வைத்தார்கள். தற்போது இந்த இரண்டு சாதனைகளையும் முறியடிக்கும் விதத்தில் திருவள்ளுர் சூர்யா ரசிகர்கள் சுமார் 215 அடி உயர கட்-அவுட் வைத்து புதிய சாதனை படைத்துள்ளார்கள்.
இந்த கட்-அவுட் வைக்கும் பணி கடந்த 17 ஆம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்துள்ளது. இந்த கட்-அவுட்டுக்கு நாளை மாலை விழா நடத்தும் சூர்யா ரசிகர்கள் என்.ஜி.கே ரிலீஸின் போது மேலும் பல விழாக்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.