Oct 10, 2019 06:03 PM
சூர்யா செய்த உதவி! - பாராட்டும் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா, நடிப்பதோடு மட்டும் இன்றி பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். குறிப்பாக தனது அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பெரிதும் உதவி வருபவர், தாமாக முன் வந்து பலருக்கு பல உதவிகள் செய்து வருகிறார்.
அந்த வகையில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு தீபாவளிக்காக ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். இந்த நிதியை இயக்குநர் சங்கத்தின் செயலாளர் ஆர்.வி.உதயகுமார், சூர்யாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
‘காப்பான்’ படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அப்படத்திற்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.