Oct 01, 2019 04:47 AM

சத்தமில்லாமல் சாதித்த சூர்யா! - மகிழ்ச்சியில் விநியோகஸ்தர்கள்

சத்தமில்லாமல் சாதித்த சூர்யா! - மகிழ்ச்சியில் விநியோகஸ்தர்கள்

கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணியில் வெளியான மூன்றாவது படமான ‘காப்பான்’ வெளியான முதல் நாளே நல்ல ஓபனிங் பெற்றது. படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், ரசிகர்களிடம் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

 

தற்போதும் தமிழகத்தின் பல பகுதிகளில் விடுமுறை நாட்களில் ஹவுஸ்புல் காட்சியாக ‘காப்பான்’ ஓடிக்கொண்டிருக்கிறது.

 

முன்னணி ஹீரோக்கள் படங்கள் நிஜமாக வசூல் செய்கிறதோ இல்லையோ தயாரிப்பு தரப்பில் இருந்து, இத்தனை கோடி வசூல், அந்த வசூல் சாதனையை முறியடித்துவிட்டது, என்று தகவல்கள் வெளியிடப்படும். ஆனால், ‘காப்பான்’ படத்தை பொருத்தவரை அப்படி எந்த தகவலையும் தயாரிப்பு தரப்பு வெளியிடவில்லை.

 

இந்த நிலையில், ’காப்பான்’ தமிழ் சினிமா வியாபாரிகளுக்கு லாபகரமான படமாகவே அமைந்திருப்பதாக தமிழ் சினிமா விநியோகஸ்தர்கள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் ரூ.47 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் ‘காப்பான்’ படத்தினால் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் லாபம் பார்த்திருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.

 

ஆக, மொத்தம் நடிகர் சூர்யா சத்தமே இல்லாமல் சாதித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.