May 30, 2019 05:41 AM

ஆந்திர முதல்வராக சூர்யா! - தேடி வந்த பிரம்மாண்ட வாய்ப்பு

ஆந்திர முதல்வராக சூர்யா! - தேடி வந்த பிரம்மாண்ட வாய்ப்பு

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரசியல் படமான ‘என்.ஜி.கே’ நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் வெளியீட்டை சூர்யா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாட திட்டமிட்டுள்ளார்கள். அதற்காக உலகிலேயே மிக உயரமான கட்-அவுட்டும் வைத்துள்ளார்கள்.

 

இப்படி சூர்யா அரசியல் படத்தில் நடித்த நேரமோ என்னவோ, அவரை ஆந்திர முதல்வராக்க இயக்குநர் ஒருவர் விரும்புகிறாராம்.

 

சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் எஸ்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இன்று பதவி ஏற்க உள்ளார்.

 

இந்த நிலையில், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாற்றை ‘யாத்ரா’ என்ற தலைப்பில் படமாக எடுத்த மஹி வி.ராகவ், தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இரண்டாம் பாகத்தில், ஆந்திர முதல்வராக உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் வளர்ச்சி குறித்து காட்ட இருக்கிறாராம்.

 

இதில், ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் சூர்யாவை நடிக்க வைக்க இயக்குநர் ராகவா விரும்புகிறாராம். விரைவில் சூர்யாவை அணுகி இது பற்றி பேச இருப்பதாக ஆந்திர மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.

 

இது குறித்து சூர்யாவிடம் கேட்டதற்கு, “நல்ல ஸ்கிரிப்ட் கொண்டுவந்தால் நிச்சயம் நடிப்பேன், ஆவலாக காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.