Jan 31, 2020 08:56 AM

ஹரி கதையை நிராகரித்த சூர்யா! - இவர் கதையை ஓகே செய்துவிட்டாராம்

ஹரி கதையை நிராகரித்த சூர்யா! - இவர் கதையை ஓகே செய்துவிட்டாராம்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால், அப்படத்தின் கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை என்பதால், அதை அவர் நிராகரித்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

 

இதற்கிடையே, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை தாணு தயாரிக்கிறார். இது சூர்யாவின் 40 வது படமாகும். ‘சூரரைப் போற்று’ சூர்யாவின் 38 வது படமாகும். 39 வது படமாக ஹரியின் படம் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஹரி கதையை சூர்யா நிராகரித்ததால், அவரது 38 வது படத்தின் இயக்குநர் யாராக இருப்பார்? என்ற கேள்வி எழுந்தது. தற்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது.

 

சூர்யாவின் 38 வது படத்தை த.செ.ஞானவேல் இயக்கப் போகிறாராம். அசோக் செல்வன், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த் ஆகியோரை வைத்து ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல், சூர்யாவின் ‘அகரம்’ அறக்கட்டளையின் முதன்மை செயற்பாட்டாளராக இருக்கிறார். இவர் இயக்கிய ‘கூட்டத்தில் ஒருத்தன்’ கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது. படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால், அதன் பிறகு ஞானவேலுக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

 

TJ Gnanavel kootathil oruthan

 

இந்த நிலையில், ஞானவேலுக்கு மீண்டும் வாய்ப்பளித்திருக்கும் சூர்யா, அவரது கதையை தனது 38 வது படமாக ஓகே செய்திருக்கிறாராம். அந்த படத்திற்கு ‘எலிவேட்டை’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்களாம்.