Jun 15, 2020 08:17 AM

சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல, கொலை! - உறவினரின் தகவலால் பரபரப்பு

சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல, கொலை! - உறவினரின் தகவலால் பரபரப்பு

கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை திரைப்படத்தில் டோனியாக நடித்து புகழ் பெற்ற நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத், நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார். இளம் வயது நடிகரின் இந்த முடிவு பாலிவுட் சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

சுஷாந்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவர் தற்கொலை செய்துக்கொண்டதை மருத்துவர்கள் உறுதிப்படுடுத்தியுள்ளனர்.

 

இந்த நிலையில், சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை, அவனை யாரோ கொலை செய்துவிட்டார்கள், என்று அவரது உறவினர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சுஷாந்தின் தாய் வழியில் மாமா முறை உள்ள ஒருவர், சுஷாந்த் மரணம் குறித்து மீடியாக்களில் பேசி வருகிறார். அவர் கூறுகையில், “சுஷாந்த் மிக தைரியமானவன். அவன் ஒரு போதும் தற்கொலை செய்திருக்க மாட்டான், அவனை யாரோ கொலை தான் செய்துள்ளனர்.” என்று கடுமையாக பேசியிருக்கிறார்.