Jun 15, 2020 04:30 AM

தற்கொலை முடிவை முன் கூட்டியே வெளிப்படுத்திய சுஷாந்த்சிங் - முழு தகவல் இதோ

தற்கொலை முடிவை முன் கூட்டியே வெளிப்படுத்திய சுஷாந்த்சிங் - முழு தகவல் இதோ

கொரோனா கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் திரையுலகினருக்கு தொடர் மரணங்கள் பேரிடியாக அமைந்துள்ளது. பாலிவுட் முன்னணி நடிகர்கள் சிலர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயிரிழக்க, இளம் பாலிவுட் நடிகரான சுஷாந்த்சிங் ராஜ்புத், தற்கொலை செய்துக் கொண்டது, இண்டிய சினிமாவையே கலங்க வைத்துள்ளது.

 

34 வயதாகும் சுஷாந்த்சிங் ராஜ்புத், பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் முக்கியமானவர். டோனியின் வாழ்க்கை திரைப்படமான ‘எம்.எஸ்.டோனி : தி அண்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படம் இவரை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்திய நிலையில், அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து வந்தார்.

 

இதற்கிடையே, சுஷாந்த்சிங் நேற்று தன் வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனையில் சுஷாந்த்சிங் தற்கொலை தான் செய்துக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த சுஷாந்த்சிங், அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

 

Sushant Singh Rajput Suicide Photo

 

இந்த நிலையில், சுஷாந்த்சிங் தான் தற்கொலை செய்யப் போவதை முன் கூட்டியே சூஷகமாக தெரிவிப்பது போல ஒரு விஷயத்தை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது, அவரது ட்விட்டர் பக்க டிபி-யில் ஒரு ஓவியத்தை அவர் வைத்துள்ளார். அந்த ஓவியம் வரைந்தவர், அந்த ஓவியத்தை வரைந்த ஒரு மாதத்தில் தற்கொலை செய்துக் கொண்டாராம். இந்த சம்பவம், 1980 ஆம் ஆண்டு நடைபெற்றதாம்.

 

தற்போது இந்த ஓவியத்தை தனது டிபி-யில் சுஷாந்த்சிங், வைத்திருக்கிறார் என்றால், அவர் தான் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதை வெளிப்படுத்துவதற்காகவே என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.

 

Sushant Singh Rajput