Aug 05, 2018 06:49 PM

இந்திரா செளந்தர்ராஜன் கதையில் உருவாகும் மர்மத்தொடர் ‘சுப்ரமணியபுரம்’!

இந்திரா செளந்தர்ராஜன் கதையில் உருவாகும் மர்மத்தொடர் ‘சுப்ரமணியபுரம்’!

திரைப்படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு பிரம்மாண்டமான முறையில் உருவாக இருக்கும் தொடர் ‘சுப்ரமணியபுரம்’.

 

தற்போது பல சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு புதிய கதைக்களத்தில் திகில், மர்மங்கள் நிறைந்த தொடராக உருவாகும் இத்தொடரின் தொடக்க விழா சமீபத்தில் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

 

Subramaniyapuram Serial

 

வி.சங்கர்ராமன் தயாரிப்பில் உருவாகும் இந்த தொடரி ஹரீஷ் ஆதித்யா இயக்குகிறார். இவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கும்மாளம்’ படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், ‘திருடா திருடி’, ‘மலைக்கோட்டை’ ஆகிய படங்களிலும், சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். அதன்பின் சின்னத்திரை தொடர்களில் டைரக்‌ஷன் பக்கம் கவனத்தை திருப்பிய இவர் தற்போது ‘சுப்ரமணியபுரம்’ தொடரின் மூலம் இயக்குநராகியுள்ளார்.

 

Harish Aadithya

 

இது சுப்ரமணியபுரம் என்கிற ஊரை பற்றிய கதை. அந்த ஊரில் உள்ள கோயிலில் உள்ள சிலை ஒன்று காணாமல் போகிறது. அதனால் அந்த ஊர் சாபத்திற்கு ஆளாகிறது. அதையடுத்து அந்த ஊரில் நடக்கும் மர்மங்களும் அதை நாயகன் எப்படி கண்டுபிடித்தார் என்பதும் தான் கதை. கதாநாயகன் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. கதாநாயகியாக ககனா நடிக்கிறார்.

 

மர்ம கதைகளுக்கு பெயர்போன எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன், இந்த தொடருக்கு கதை எழுதியுள்ளார். சரவணகுமார் ஒளிப்பதிவு செய்ய, விவேக் சங்கர் வசனம் எழுதுகிறார்.

 

Subramaniyiapuram Serial

 

வழக்கமான லொக்கேஷன்களில் இந்த தொடரில் படப்பிடிப்பை நடத்த விரும்பாத இயக்குநர் ஹரீஷ் ஆதித்யா, இத்தொடரின் படப்பிடிப்பு முழுவதையும் கர்நாடகாவில் உள்ள வனப்பகுதியில் நடத்த இருக்கிறார். மேலும், கதைக்கேற்ற கிராமும், கோவிலும் அந்தப் பகுதியிலேயே கிடைத்திருக்கிறது.

 

வரும் செப்டம்பர் முதல் ஜெயா டிவியில் இந்த தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.