தமன்னா கொடுத்த ரேங்க்! - அஜித் ரசிகர்கள் ஹாப்பி, விஜய் ரசிகர்கள் அப்செட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் தமன்னா, ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் அவர் பேயாக நடித்து வெற்றி பெற்ற ‘தேவி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘தேவி 2’ இன்று வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தமன்னா செய்த ஒரு விஷயத்தால் அவர் மீது விஜய் ரசிகர்கள் பெரும் கோபம் கொண்டிருக்கிறார்கள்.
’தேவி 2’ படத்தின் புரோமோஷனுக்காக பேட்டி கொடுத்து வரும் தமன்னா, ஒரு பேட்டியில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு ரேங்க் கொடுத்துள்ளார்.
அதில், அஜித்துக்கு முதல் இடம் கொடுத்திருக்கும் தமன்னா, கார்த்திக்கு இரண்டாம் இடமும், விஷாலுக்கு மூன்றாம் இடமும் கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு நான்காம் இடம் கொடுத்திருக்கிறார். அவரை தொடர்ந்து விக்ரம், சூர்யா ஆகியோருக்கு அடுத்தடுத்த ரேங் கொடுத்திருக்கிறார்.
விஜய்க்கு தமன்னா நான்காவது இடம் கொடுத்திருப்பதால் அவர் மீது விஜய் ரசிகர்கள் கோபமடைந்திருப்பதோடு, அவரது நடிப்பை விமர்சித்தும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதே சமயம், முதல் இடம் கொடுக்கப்பட்ட அஜித் ரசிகர்கள் ஹாப்பி மோடுக்கு சென்றிருக்கிறார்கள்.