Mar 06, 2019 09:25 AM
சம்பளத்தை உயர்த்திய தமன்னா! - எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக உள்ள தமன்னா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க விரும்புகிறார். அதற்காக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை கேட்பதில் ஆர்வம் காட்டுகிறாராம். அப்படியே சீனு ராமசாமி போன்ற எதார்த்தமான படங்களை இயக்கும் இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறாராம்.
சீனு ராமசாமியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கண்ணே கலைமானே’ படத்தில் தமன்னாவின் வேடம் பெரும் பாராட்டு பெற்றதால் உற்சாகமடைந்திருக்கும் தமன்னா, அதுபோன்ற வேடங்களில் தொடர்ந்து நடிக்க ரெடியாக இருக்கிறாராம்.
இந்த நிலையில், ‘கண்ணே கலைமானே’ படத்திற்கு ரூ.1.40 கோடி சம்பளம் வாங்கிய தமன்னா, ‘தேவி 2’ படத்தில் இருந்து தனது சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது.