Oct 01, 2019 05:55 AM

சென்னை தொழிலதிபருக்கு ஜோடியான தமன்னா!

சென்னை தொழிலதிபருக்கு ஜோடியான தமன்னா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, நடிப்பில் உருவாகியுள்ள ‘பெட்ரோமாஸ்’ படம் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்து தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்திலும் தமன்னா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.

 

இதற்கிடையே, தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், அவர் தொழிலதிபர் ஒருவரை மணக்க இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால், எப்போதும் போல இந்த தகவலை தமன்னா மறுத்த நிலையில், அவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு ஜோடியாகப் போகிற தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆனால், இது நிஜ வாழ்க்கையில் அல்ல, ரீல் வாழ்க்கையில். ஆம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆடை விற்பனை நிறுவனமான சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் ஹீரோவாக நடிக்கும் படத்தில் தமன்னா ஹீரோயினாக நடிக்கப் போகிறாராம்.

 

ஏற்கனவே சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களில் அருளுடன் ஜோடி போட்ட தமன்னாவை, தற்போது திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக்க இயக்குநர்கள் ஜெடி மற்றும் ஜெர்ரி முயற்சித்து வருகிறார்களாம்.

 

முதலில் நயன்தாராவை டார்க்கெட் செய்து அவரிடம் கால்ஷீட் கேட்க, அவரோ நேரடியாக மறுப்பு சொல்லாமல் ரூ.10 கோடி சம்பளம் கேட்டாராம். அதற்கு அருள் தரப்பு, சட்டென்று ஓகே சொல்ல, நயன்தாராவே அதிர்ந்து போனாராம். பிறகு, தனது காதலர் விக்னேஷ் சிவன் மூலம் நேரடியாகவே நடிக்க விருப்பம் இல்லை என்று நயன் கூறிவிட்டாராம்.

 

Tamanna and Saravana Stores Arul

 

நயன் நோ சொன்னதால் தற்போது தமன்னாவை சரவணா ஸ்டோர்ஸ் அருளுக்கு ஜோடியாக்க இயக்குநர் தரப்பு பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளதாம். அநேகமாக இந்த பேச்சு வார்த்தை வெற்றியில் தான் முடியும், என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.