Jun 23, 2019 07:50 AM

வைரலாகும் தகவல்! - கதறிய தமன்னா

வைரலாகும் தகவல்! - கதறிய தமன்னா

தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வரும் தமன்னா, தற்போது இரண்டு தமிழ் படங்களிலும், இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். அத்துடன், சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் முக்கியமான வேடத்தில் தமன்னா நடிக்கிறார்.

 

இந்த நிலையில், ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் தமன்னா வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவல் பரவ தொடங்கியதும், ரசிகர்கள் பலர் தமன்னாவுக்கு வில்லி வேடம் செட்டாகாது, எதற்காக அவருக்கு இந்த வீண் வேலை, என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்க தொடங்கினார்கள்.

 

இது குறித்து தமன்னா காதுக்கு தகவல் போக, பதறியவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நான் வில்லியாக நடிக்கவில்லை. அப்படி நடிக்கும் எண்ணமும் எனக்கு இல்லை,  என்று தெரிவித்துள்ளார்.

 

எப்போதும் திருமணம் பற்றி வதந்திகள் வந்துக்கொண்டிருக்க, தற்போது தனது சினிமா வாழ்க்கைக்கே பிரச்சினை வரக்கூடிய ஒரு வதந்தி எப்படி பரவியதோ, இதை யார் வெளியிடுகிறார்களோ, என்று தனது நெருக்கமானவர்களிடம் தமன்னா புலம்பி வருகிறாராம்.