Jan 23, 2020 09:30 AM

மதுவுக்கு அடிமையான பிரபல தமிழ் நடிகரின் சோகமான பதிவு!

மதுவுக்கு அடிமையான பிரபல தமிழ் நடிகரின் சோகமான பதிவு!

சினிமா நடிகர் மற்றும் நடிகைகள் சொகுசு கார், வசதியான வீடு என்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும், வாழ்க்கையில் பல வித கஷ்ட்டங்களை அனுபவித்து வருகிறார்கள். இதில், சில பிரச்சினைகளை எதிர்கொள்ள துணிவில்லாமல், மது உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு ஆளாகி தங்களது வாழ்க்கையை இழந்தும் விடுகிறார்கள்.

 

அப்படி ஒரு நிலைக்கு பிரபல நடிகர் ஒருவர் தள்ளப்பட்டு, பிறகு மருத்துவ சிகிச்சை மூலம் மீண்டு வந்திருக்கிறார். அவர் தான் விஷ்ணு விஷால்.

 

‘வெண்ணிலா கபடி குழு’ படம் ஹீரோவாக அறிமுகமான விஷ்ணு விஷால், தொடர்ந்து ‘ஜீவா’, ‘வேலைணு வந்தா வெள்ளக்காரன்’, ‘ராட்சசன்’ போன்ற வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, சொந்தமாக படம் தயாரிக்கவும் செய்தார். தற்போது தனது சொந்த நிறுவனத்தின் மூலம் சில படங்களை தயாரித்து ஹீரோவாக நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே, ஜீவா காதலித்து திருமணம் செய்துக் கொண்ட தனது மனைவி ரஜினி நட்ராஜை விவாகரத்து செய்தார். மேலும், விவாகரத்துக்கு காரணம், தனது மனைவிக்கு ஏற்பட்ட சந்தேகம் தான், என்றும் விளக்கம் அளித்தார். அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தியவர், தற்போது பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

 

Vishnu Vishal

 

இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், மன அழுத்தத்திற்கு ஆளாகி குடி பழக்கத்திற்கும் அடிமையாகிவிட்டதாக, அவரே தெரிவித்துள்ளார். விவாகரத்து, மகன் பிரிவு ஆகிய பிரச்சினைகளில் சிக்கி தவித்த விஷ்ணு விஷால், அதனால் மது பழக்கத்திற்கு ஆளானதோடு, எப்போதும் போதையிலேயே இருந்தாராம். பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்ற பிறகு, மீண்டும் புதிய உத்வேகத்துடன் பணியில் ஈடுபட்டிருப்பவர், உடலை எப்படி ஆரோக்யமாக வைத்துக்கொள்ள வேண்டும், என்பதில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

 

மேலும், 27 வயது வரை மது பழக்கம் இல்லாமல் இருந்த விஷ்ணு விஷால், சினிமாத் துறைக்கு வந்த பிறகு தான் குடி பழக்கத்தை கற்றுக் கொண்டதாகவும், அவர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.