Apr 22, 2020 03:13 PM

தனிமையில் இருந்தததால் மனநலம் பாதிப்பு! - சிகிச்சை பெரும் தமிழ் நடிகை

தனிமையில் இருந்தததால் மனநலம் பாதிப்பு! - சிகிச்சை பெரும் தமிழ் நடிகை

கொரோனா வைரஸ் பிரச்சினையின் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் ஊரடங்கால் பலர் குடும்பங்களை பிரிய வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்த் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை ஒருவரும் தனிமையில் சிக்கி மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

‘ரா ரா’, ‘சந்தமாமா’, ‘மை’ ஆகிய தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர் ஸ்வேதா பாசு. 2002 ஆம் ஆண்டு வெளியான ‘மக்டீ’ என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமான ஸ்வேதா பாசு, அப்படத்திற்காக தேசிய விருது வென்றார். தொடர்ந்து பல இந்தி படங்களிலும், தெலுங்கு மற்றும் பெங்காலி படங்களிலும் நடித்து வந்தவர், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடித்திருக்கிறார்.

 

இதற்கிடையே, கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தி சினிமா இயக்குநர் ரோகித் மிட்டல் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ஸ்வேதா பாசு, 2019 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். விவாகரத்துக்கு பிறகு சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

 

Actress Swetha Basu

 

இந்த நிலையில், ஸ்வேதா பாசு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். அதனால், அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதிக நாட்கள் தனிமையில் இருந்ததால் ஸ்வேதா பாசுவின் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனல் அவருக்கு வீடியோ கால் மூலம் மனநல மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறாராம்.