Jul 05, 2019 12:37 PM

பிக் பாஸ் தர்ஷன் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ் நடிகை!

பிக் பாஸ் தர்ஷன் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ் நடிகை!

பிக் பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேலாகிவிட்ட நிலையில், வரும் வாரும் போட்டியாளர்கள் ஒருவர் வெளியேற்றப்பட உள்ளார். அது யார்? என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில், தர்ஷன் குறித்த சீக்ரெட் ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிக் பாஸ் வீட்டில் யார் வம்பு தும்புக்கும் போகாமல் சமத்து பையனாக இருக்கும் தர்ஷனிடம் “நீ என்னை அப்பா என்று கூப்பிடாதே” என்று மோகன் வைத்யா கூறியதால், அவர் அழுதத்தற்கு அத்தனை பேரு பரிதாபப்பட்டார்கள்.

 

இந்த நிலையில், தர்ஷன் குறித்த சீக்ரெட் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இலங்கையை சேர்ந்த தர்ஷனுக்கு மாடலிங் துறையில் உதவிகள் செய்ததோடு, அவரை படத்தில் நடிக்க முயற்சித்தது முதல் தற்போது அவர் பிக் போட்டியில் பங்கேற்றிருப்பதுவரை அனைத்துக்கும் பின்னணியில் தமிழ்ப் பட ஹீரோயின் ஒருவர் இருக்கிறாராம்.

 

2012 ஆம் ஆண்டு வெளியான ‘அம்புலி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சனம் ஷெட்டி. இவர் தொடர்ந்து ‘மாயை’, ‘விலாசம்’, ‘கதம் கதம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

 

தற்போது ‘23’ மற்றும் ‘டிக்கெட்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வரும் சனம் ஷெட்டி, தர்ஷனுக்கு நெருங்கிய நண்பராம். தர்ஷன் மாடலிங் துறையில் ஈடுபட்ட போது அவருக்கு பல உதவிகளை செய்தவர், பிரபல புகைப்பட கலைஞர் ஜோவியை வைத்து தர்ஷனுக்கு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியதோடு, அவர் நடிக்கும் படத்தில் தர்ஷனுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தாராம்.

 

அத்துடன் நின்றுவிடாமல், தர்ஷனை எப்படியாவது மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக, அவரை பிக் பாஸ் போட்டியில் பங்கேற்பதற்கான உதவிகளை செய்ததும் சனம் ஷெட்டி தானாம்.

 

Sanam Shetty

 

இப்படி தர்ஷன், வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் சனம் ஷெட்டி, அவரை காதலிக்கிறாரோ, என்னவோ என்று நெட்டிசன்கள் பேச தொடங்கிவிட்டார். இது காதலா அல்லது வெறும் நட்பா என்பதை சனம் ஷெட்டி தான் கூற வேண்டும்.