May 17, 2019 06:18 PM

மது பாட்டிலுடன் பிரபல தமிழ் நடிகை! - புதிய சர்ச்சை வெடித்தது

மது பாட்டிலுடன் பிரபல தமிழ் நடிகை! - புதிய சர்ச்சை வெடித்தது

முன்னணி நடிகைகள் பலர் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்குவது நடந்து வருகிறது. அதிலும், மது அருந்திவிட்டு கார் ஓட்டுவது, பார்ட்டியில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு ரகளை செய்வது என்று பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.

 

இந்த நிலையில், முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங் அதுபோன்ற சர்ச்சையில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

‘தடையற தாக்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரகுல் பிரீத் சிங், ஒரு சில தமிழ்ப் படங்கள் ஹீரோயினாக நடித்தார். ஆனால், அப்படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், தெலுங்கில் அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றதால் அங்கே முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார்.

 

தற்போது தமிழ் சினிமாவிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்கள் மட்டும் இன்றி, இந்தியிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

 

Raghul Preeth Singh and Ajay Devgan

 

முன்னணி பாலிவுட் ஹீரோவான அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்திருக்கும் ‘தி தி பியார் தி’ படம் இன்று வெளியாகியுள்ளது. யு/ஏ சான்றிதம் பெற்றுள்ள இப்படத்தில், ஒரு பாடலில் ரகுல் பிரீத் சிங் கையில் மது பாட்டிலுடன் வந்து சில விநாடிகள் நடனம் ஆடுகிறாராம்.

 

Raghul Preeth Singh in Bollywood movie

 

இந்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட, தற்போது சென்சார் போர்டு இந்த காட்சியை நீக்க சொல்லியிருக்கிறார்களாம்