Dec 07, 2019 02:08 AM

தமிழ் சினிமாவுக்கு மிரட்டலான வில்லன் கிடச்சாச்சு!

தமிழ் சினிமாவுக்கு மிரட்டலான வில்லன் கிடச்சாச்சு!

பி.எஸ்.வீரப்பா, நம்பியார், ரகுவரன், நாசர், பிரகாஷ்ராஜ் என்று தமிழ் மிரட்டலான வில்லன்களை கொண்டிருந்த தமிழ் சினிமா தற்போது வில்லன்களுக்காக அண்டை மாநில திரையுலகை தான் நம்பியிருக்கிறது. அவர்களும் ஒன்று இரண்டு படங்களுக்குப் பிறகு காமெடி நடிகர்களாகிவிடுவதால், ரசிகர்களை மிரட்டக் கூடிய வில்லன்களுக்கான இடம் கோலிவுட்டில் காலியாகவே உள்ளது.

 

தற்போது அந்த இடத்தை நிரப்பக்கூடிய விதத்தில் தனது வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டியிருக்கிறார் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.

 

ஓவியராக திரையுலகினருக்கு நன்கு அறியப்பட்ட ஏ.பி.ஸ்ரீதர், நேற்று வெளியான ‘ஜடா’ படம் மூலம் நடிகராக பிரபலமாகியிருக்கிறார். ஏற்கனவே ‘ஆந்திரா மெஸ்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து கவனிக்க வைத்த ஏ.பி.ஸ்ரீதர், ‘ஜடா’ படத்தில் வில்லனாக மிரட்டியிருக்கிறார்.

 

AP Sreedhar

 

வில்லன் என்றால் அவரை பார்க்கும் போதே ரசிகர்களுக்கு ஒருவித பயமும், அவர் மீது கோபமும் ஏற்பட வேண்டும். அந்த வகையில் தனது மிரட்டலான பார்வையின் மூலம் ரசிகர்களை பயப்பட வைத்திருக்கும் ஏ.பி.ஸ்ரீதர், படத்தின் அறிமுகக் காட்சியிலேயே நம்மை கவனிக்க வைப்பவர், அதன் பிறகு தனது மகனுக்காக பழிவாங்கும் காட்சியில், கோபப்பட வைக்கிறார்.

 

பக்கம் பக்கமாக வசனம் பேசாமல், தனது பார்வையினாலேயே தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கும் ஏ.பி.ஸ்ரீதரின் தோற்றமும், நடிப்பும் கோலிவுட்டில் காலியாக இருக்கும் மிரட்டலான வில்லனுக்கான இடத்தை கைப்பற்றிவிடுவார், என்பதை உணர்த்துகிறது.

 

கதிர், யோகி பாபு, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘ஜடா’ படத்தில் தனது வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டியிருக்கும் ஏ.பி.ஸ்ரீதர், ஓவியத்தில் மட்டும் அல்ல நடிப்பிலும் தான் கில்லாடி என்பதை நிரூபித்திருக்கிறார்.

 

AP Sreedhar in Jada

 

படம் குறித்து ஏ.பி.ஸ்ரீதர் கூறுகையில், “அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் ஜடா திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நடிக்க என்னை அணுகினார்கள். இப்பொழுது படத்தை பார்த்த அனைவரும் என்னை பாராட்டுகிறார்கள். என்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினருக்கே சேரும். பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். சாம்.சி.எஸ். இசையமைக்க, சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இவர்களின் கூட்டு முயற்சியால் என்னுடைய நடிப்பு கவனம் பெற்றிருக்கிறது. தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.