Jun 08, 2020 11:57 AM

ஒரே வீட்டில் சீரியல் நடிகர், நடிகை தற்கொலை - சென்னையில் பரபரப்பு

ஒரே வீட்டில் சீரியல் நடிகர், நடிகை தற்கொலை - சென்னையில் பரபரப்பு

சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு நாட்களாக துர்நாற்றம் வீச, அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் அந்த வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு ஆண் மற்றும் பெண் என இரண்டு சடலங்கள் அழுகிய நிலையில் இருந்தனர். இருவருக்கும் சுமார் 45 முதல் 50 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

இரண்டு உடல்களும் அரசு மருத்துவவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இறந்தவர்கள் ஸ்ரீதர் மற்றும் அவரது தங்கை ஜெய கல்யாணி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இவர்கள் இருவரும் சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருபவர்கள். சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள்.

 

கொரோனா ஊரடங்கினால் சுமார் இரண்டரை மாதங்களாக சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் இல்லாததால் வறுமைக்கு தள்ளப்பட்ட ஸ்ரீதர் மற்றும் ஜெய கல்யாணி, மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக் கொண்டதாக போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

ஏற்கனவே, இந்தி சீரியல் நடிகர், நடிகைகள் சிலர் வறுமையால் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், தற்போது தமிழ் சீரியல் நடிகர், நடிகையின் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.