Sep 11, 2019 03:51 AM

வலுக்கும் தமிழர்களின் எதிர்ப்பு! - விஜய் சேதுபதியின் படம் டிராப்பாகுமா?

வலுக்கும் தமிழர்களின் எதிர்ப்பு! - விஜய் சேதுபதியின் படம் டிராப்பாகுமா?

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ தீபாவளிக்கு வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டு பிறகு அந்த முடிவு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தில் நடிக்க இருக்கிறார்.

 

இப்படத்தில் அவர் நடிப்பதற்கு ஏற்கனவே உலக தமிழகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், யார் மனதையும் புன்படுத்தும்படியான காட்சிகளும் படத்தில் இருக்காது. அனைவரின் உணர்வுக்கும் மதிப்பளித்து தான் படம் உருவாகும், என்று விஜய் சேதுபதி கூறினார்.

 

இந்த நிலையில், வர இருக்கும் இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் சகோதரரான கோத்தபய ராஜபக்சே போட்டியிட, அவருக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பிரசாரம் செய்ய தொடங்கியிருப்பதோடு, விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் பேசி வருகிறார்.

 

சமீபத்தில் கோத்தபய ராஜபக்சே ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முத்தையா முரளிதரன், “தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் அப்பாவி மக்களைப் படுகொலை செய்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட அன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இனி இந்த நாட்டில் அமைதியாக வாழ முடியும் என்று எனக்கு தோன்றியது. இலங்கையைப் பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதிதான் அடுத்த அதிபராக ஆட்சிக்கு வர வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்கு அனுபவம் உள்ள ஒருவரால்தான் தீர்வு காணவும் முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

முத்தையா முரளிதரனின் இத்தகைய பேச்சு உலக தமிழகர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியதோடு, அவரது வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 

இதே தமிழர் பிரச்சினைக்காக தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களும், எழுத்தாளர்களும் மத்திய அரசின் விருதுகளை நிராகரித்த போது அதை வரவேற்ற விஜய் சேதுபதி, தமிழகர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிப்பதை கைவிடுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.