Feb 04, 2020 05:22 PM

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு! - உலக தமிழர்களை வரவேற்கும் துரை சுதாகர் ரசிகர்கள்

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு! - உலக தமிழர்களை வரவேற்கும் துரை சுதாகர் ரசிகர்கள்

தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ  சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம்  24 ஆண்டுகளுக்குப் பிறகு  பிப்ரவரி 5 ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. 

 

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையும் மத்திய அரசின் தொல்லியல் துறையும்  இணைந்து இந்த கும்பாபிஷேக விழாவை நடத்திக் கொண்டிருந்தாலும், தமிழக மக்களும் இவ்விழாவை கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக தஞ்சை மக்கள், உலக தமிழர்களை இவ்விழாவுக்காக வரவேற்று வருகிறார்கள்.

 

அந்த வகையில், தஞ்சை மக்களால் பப்ளிக் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகரும், தொழிலதிபருமான துரை சுதாகர் மற்றும் அவரது ரசிகர்கள், தஞ்சை பெரிய கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி, அக்கோயிலும் சிறப்பையும், தஞ்சையின் பெருமையையும் சமூக வலைதளங்கள் மூலமாக உலக மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்கள்.

 

தஞ்சையை தாண்டி தமிழகம் மட்டும் இன்றி உலக மக்களும் தஞ்சை பெரிய கோவிலும் கும்பாபிஷேக நிகழ்வை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நடிகர் துரை சுதாகர், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

 

‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்து பாராட்டு பெற்ற துரை சுதாகர், ‘டேனி’ உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகராவதற்கு முன்பே தஞ்சையில் பிரபலமானவராக திகழ்ந்த நிலையில், தற்போது நடிகரானவுடன், இவர் மீது அன்பு கொண்டவர்கள், நடிகர் துரை சுதாகர் பெயரில் நற்பணி மன்றம் தொடங்கு, அதன் மூலம் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இளைஞர்களை ஊக்குவித்து வருகிறார்கள்.

 

Durai Sudhakar in Tanjore Temple Festival

 

தற்போது தஞ்சை பெரிய கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வையொட்டி, தஞ்சையின் பெருமையை தற்போதைய காலக்கட்ட இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் நடிகர் துரை சுதாகரின் நற்பணி மன்றம் எடுத்துரைத்து வருகிறது.