’சாஹோ’ படத்தால் தெலுங்கு சினிமா இயக்குநர்களுக்கு ஏற்பட்ட அவமானம்!

பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் சுஜித் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘சாஹோ’ பல கோடிகளை வசூலித்திருப்பதாக படக்குழு விளம்பரம் செய்து வந்தாலும், படம் என்னவோ ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான பிரம்மாண்ட படம் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம், முழுக்க முழுக்க கிரீன் மேட் பயன்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதோடு, அது காட்சிகளில் அப்பட்டமாக தெரிவதாகவும் ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள்.
விமர்சனம் ரீதியாகவும் படம் பெரும் பின்னடைவை சந்திருக்கும் நிலையில், பிரெஞ்ச் திரைப்படமான ’Largo Winch’ படத்தின் காப்பி என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. இதற்மு முன்பே இந்த பிரெஞ்ச் படத்தை தழுவி ‘அங்னியாதவாசி’ என்ற தெலுங்குப் படம் எடுக்கப்பட்டது. தற்போது அதே பிரெஞ்ச் படத்தை சுட்டு தான் ‘சாஹோ’ எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கதை திருடியது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ’Largo Winch’ படத்தின் இயக்குநர் Jérôme Salle, “இந்த முறையும் மிக மோசமாகதான் எடுத்திருக்கிறார்கள். தெலுங்கு சினிமா இயக்குநர்களே கதை திருடி எடுத்தாலும், அதை சரியாக எடுங்கள்” என்று காட்டமாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரெஞ்ச் இயக்குநரின் இந்த காட்டமான பதிவால், தெலுங்கு சினிமா இயக்குநர்களுக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது.