May 13, 2019 09:47 AM

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ’தளபதி 63’ பட நடிகை! - லீக்கான போட்டோ

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ’தளபதி 63’ பட நடிகை! - லீக்கான போட்டோ

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமான அரங்குகளில் நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை அடுத்துள்ள ஸ்டுடியோ ஒன்றில் செட் அமைக்கப்பட்டுள்ளது.

 

பெண்கள் கால்பந்தை மையமாக வைத்த படம் என்பதால், விஜயுடன் இந்துஜா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட 16 இளம் நடிகைகள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.  

 

இதற்கிடையே,  இப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானதோடு, கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடிக்கும் நடிகைகளின் புகைப்படங்களும் வெளியாகி வருகிறது. சமீபத்தில் இந்துஜாவின் லுக் வெளியான நிலையில் தற்போது ரெபா மோனிகா ஜானின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

இதில், அவரது முகத்தின் இடத்பு புறத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டது போல மேக்கப் போடப்பட்டுள்ளது.

 

Reba Monica John