May 03, 2019 03:47 PM

‘தளபதி 63’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

‘தளபதி 63’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கும் படத்தை ‘தளபதி 63’ என்று அழைக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, இந்துஜா, ஆத்மிகா, ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொலம்மா உள்ளிட்ட இளம் நாயகிகள் பலரும் நடிக்கிறார்கள்.

 

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்காக சென்னை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில், கால்பாந்தாட்ட மைதானம், பள்ளிக்கூடம், மருத்துவமனை உள்ளிட்ட அனைத்தும் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், அடுத்தக் கட்டப் படப்பிடிப்பிற்காக ‘தளபதி 63’ படக்குழுவினர் டெல்லி செல்கிறார்கள். அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் பாடல் காட்சிகளை படமாக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.