Jun 19, 2019 06:34 AM
'தளபதி 63’ குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்! - தயாரிப்பு தரப்பு வெளியிட்டது

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துக் கொண்டிருக்கும் இன்னும் தலைப்பு வைக்கப்படாத படத்தை ‘தளபதி 63’ என்று அழைக்கின்றனர். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், இந்துஜா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் தலைப்பு விஜயின் பிறந்தநாளான ஜுன் 22 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ’தளபதி 63’ படம் குறித்த முக்கியமான அறிவிப்பு ஒன்று இன்று (ஜுன் 19) மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
தளபதி 63 படம் குறித்த அப்டேட் ஏதும் இல்லாமல் அப்செட்டில் இருந்த விஜய் ரசிகர்களை அர்ச்சனாவின் இந்த அறிவிப்பு ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.