’தளபதி 63’ யில் விஜய் லுக்! - லீக்கான புகைப்படம் இதோ

அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கும் புது படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாதால், ‘தளபதி 63’ என்று அழைக்கப்படுகிறது. பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட அணியில் பயிற்சியாளர் வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்காக சென்னையில் சர்வதேச தரத்திலான கால்பந்தாட்ட ஸ்டேடியம் செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தான் தற்போது படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விஜய் கோச் கெட்டப்பில் கோட் சூட் போட்டுக் கொண்டு பஸ்ஸில் இருந்து இறங்கி நடப்பது போன்ற வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில், தற்போது புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.
இதில், கால்பந்தாட்ட மைதானத்தில் போட்டி நடக்கும் போது விஜய், வீல் சேரில் உட்கார்ந்திருக்கிறார். படத்தில் அவருக்கு விபத்து ஏற்பட்ட நிலையிலும், அவர் போட்டியில் வெற்றி பெறுவதற்காக வீராங்கனைகளுக்கு டிப்ஸ் கொடுப்பது போன்ற காட்சியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதோ அந்த புகைப்படம்,