Dec 27, 2019 09:24 AM

விஜய் சேதுபதியின் செயலால் ‘தளபதி 64’ படக்குழு அதிர்ச்சி! - வைரலாகும் வீடியோ இதோ

விஜய் சேதுபதியின் செயலால் ‘தளபதி 64’ படக்குழு அதிர்ச்சி! - வைரலாகும் வீடியோ இதோ

விஜயின் 64 வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘தளபதி 64’ என்று அழைக்கின்றனர். இப்படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி மற்றும் விஜய் மோதும் காட்சிகள் கர்நாடக மாநிலத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.

 

விஜய் பெங்களூரில் உள்ள ஓட்டலில் தங்கியிருப்பதை அறிந்து தினமும் ஏராளமான ரசிகர்கள், அவர் தங்கியிருக்கும் ஓட்டல் வாசலில் அவரை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். விஜயும் அவர்களுக்கு விஜயம் கொடுத்து, அவர்களை மகிழ்வித்து வருகிறார்.

 

இந்த நிலையில், விஜய் சேதுபதியை பார்க்க படப்பிடிப்பு தளத்தில் வந்த ரசிகர்களை விஜய் சேதுபதி சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு, ரசிகர் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி, அவருக்கு கேக் ஓட்டி விட்டுள்ளார்.

 

விஜயின் சேதுபதியின் இந்த செயலைப் பார்த்து தளபதி 64 படக்குழு அதிரிச்சியடைந்ததோடு, அந்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

 

இதோ அந்த வீடியோ,