Feb 11, 2020 03:25 AM

நீதிமன்றத்தின் அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் பிக் பாஸ் தர்ஷன்

நீதிமன்றத்தின் அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் பிக் பாஸ் தர்ஷன்

தமிழ் பிக் பாஸ் சீசன் 3 மூலம் மக்களிடம் பிரபலமானவர் தர்ஷன். இலங்கை தமிழரான இவர், மாடலிங் துறையில் இருந்துக் கொண்டு சினிமாவில் நடிக்க முயற்சித்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம், தற்போது இரண்டு திரைப்படங்களில் ஹீரோவாக தர்ஷன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

 

இதற்கிடையே, நடிகை சனம் ஷெட்டியை காதலித்து, திருமணம் செய்துக் கொள்வதாக கூறி தற்போது திருமணம் செய்துக் கொள்ள முடியாது, என்று தர்ஷன் மறுத்து வருகிறார். மேலும், சனம் ஷெட்டியுக்கும், தர்ஷனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதோடு, திருமண தேதியும் முடிவு செய்யப்பட்டு விட்டதாம். ஆனால், தர்ஷன் சனம் ஷெட்டியை பயன்படுத்திக் கொண்டு, தற்போது தூக்கி எரிந்துவிட்டார்.

 

இது தொடர்பாக சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்திருப்பதோடு, பத்திரிகையாளர்களிடம் தனது நிச்சயதார்த்தம் தொடர்பான ஆதாரங்களை வழங்கினார். சனம் ஷெட்டியின் புகாரை மறுத்த தர்ஷன், அவர் தனது முன்னாள் காதலருடன் தற்போதும் நெருக்கமாக இருப்பதாக, புகார் கூறினார்.

 

Darshan and Sanam Shetty

 

இந்த நிலையில், சனம் ஷெட்டியும் அளித்த புகாரில் இருந்து தப்பிப்பதற்காக தர்ஷன், நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், தர்ஷனுக்கு முன் ஜாமீன் தர நீதிமன்றம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தர்ஷன் மட்டும் இன்றி, இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியாக இருந்தவர்களும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்களாம்.

 

இதனால், தர்ஷனின் சினிமா வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகும், என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.