May 26, 2019 04:51 AM

மகளுக்கு பாலியல் தொல்லை! - மோடியிடம் முறையிட்ட பிரபல நடிகர்

மகளுக்கு பாலியல் தொல்லை! - மோடியிடம் முறையிட்ட பிரபல நடிகர்

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தனிபெரும்பான்மையோடு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சினிமாத்துறை சார்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், பிரபல பாலிவுட் இயக்குநரும், நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்தவருமான அனுராக் காஷ்யப், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட வாழ்த்து பதிவில் தனது மகளுக்கு பா.ஜ.க தொண்டர்கள் பாலியல் தொல்லை தருவதாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

Anurag Kashyap

 

மோடியை தனது டுவிட்டரில் டேக் செய்து வாழ்த்துச் செய்தியில் மோடியினை டுவிட்டரில் பின்தொடரும் ஒருவரை சுட்டிக்காட்டிய அனுராக் காஷ்யப், “அன்பான மோடி அவர்களே, நீங்கள் வெற்றி பெற்றதற்கு என் வாழ்த்துக்கள். இந்த வெற்றி அனைவரையும் உள்ளடக்கிய வெற்றி என நீங்கள் கூறியதற்காக உங்களுக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  

 

அதேசமயம் நான் உங்கள் எதிர்ப்பாளராக இருப்பதால், உங்களை பின்தொடர்பவர்கள் என் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதுபோல் குறுஞ்செய்திகள் அனுப்புகின்றனர். இதுபோன்றவர்களை நாங்கள் எப்படி கையாள்வது? என கூறுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

 

அனுராக் காஷ்யப்பின் இந்த வாழ்த்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு பலர் எதிர்ப்பும், பலர் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.